Editor's Picksஅரசியல்தமிழ்நாடு

கலைஞர் சிலையை திறந்து வைக்கும் குடியரசு துனை தலைவர் வெங்கையா நாயுடு !

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கயுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26 ம் தேதி சட்டபெரவையில் விதி 110 ன் கீழ் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, கலைஞர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 16 அடி உயரத்தில் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் சிலை அமைய உள்ளது. சிலை சுமார் 12 அடி உயர பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியினை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியரசு துணைத் தலைவர்

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் அமைக்கபட்டு வரும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகிற 28ம் தேதி திறந்து வைக்கயுள்ளார். இந்த விழாவிற்கு கூட்டணிக் கட்சினர் எதிர்கட்சினர் என அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசுக்கு என புதிய தலைமை செயலகத்தை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அமைத்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏறுபட்டதும், அந்த கட்டிடத்தை அரசு பல்நோக்கு மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அது தலைமை செயலகமாக மாற்றப்படும் என எதிர்பாக்கப்பட்டது.

ஆனால் அது மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படுவதால் மாற்றப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி நினைவாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு சிலையை திமுக அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts