பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதை மாத்திரை விற்பனை
சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு போதை பொருளை தடுக்க தீவிர நடவடிக்கை அடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, கிண்டியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஜெகதீஷ், ஆண்டர்சன், லோகேஷ் ஆகிய 3 நபர்களை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 700 போதை மாத்திரைகள், 71,000 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

