மதுரையில் தமிழக நிதியமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சரவணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
பாஜகவினர் புகார்
கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி அன்று மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட, நிதியமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜகவின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், கட்சியில் இருந்து விளக்கப்பட்டது. இந்நிலையில், பாஜகவின் மதுரை மாவட்ட பிரமுகர்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், மாண்பை மீறி நிதியமைச்சரின் காரின் மீது காலணி வீச டாக்டர் சரவணன் தூண்டுதலாக இருந்ததாகவும், அவரை கைது கோரி கேட்டுக் கொண்டுள்ளனர்.

