தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால்பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இலவச தரிசனம்
தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. நேற்றைய தினம் கோகுலாஷ்டமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வி.ஐ.பி. சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து அறிவித்தது தேவஸ்தானம். ஆனால் தேவஸ்தான அறிவிப்பை மீறி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னால் முதல்வர் எடியூரப்பா மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதன்காரணமாக சாதாரண பக்தர்கள் வரும் வரிசை நிறுத்தி வைக்கப்படுகிறது. இலவச தரிசன வரிசையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர்.

