அரசியல்தமிழ்நாடு

நான் உங்கள் ‘சின்னவர்’ – உதயநிதி ஸ்டாலின் !

‘என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் கட்சியில் உள்ளார்கள். என்னை சின்னவர் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று கலந்து கொண்டார். திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தல பத்தாயிரம் விதம் ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

pudhukottai

தொண்டர்களுக்கு உதவி

பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பேசுவதை விட செயல்படத்தான் எனக்குப் பிடிக்கும். எந்த மாவட்டத்திற்கு எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு நடத்த வேண்டும். அதனை அந்த அந்த மாவட்ட செயலாளர்களிடம் கூறி ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன்.

கடந்த 3 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். இதற்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள்தான் காரணம். நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை கலைஞர் கருணாநிதியை பார்த்து வளர்ந்து உள்ளேன். தற்பொழுது திமுகவின் தொண்டர்களை பெரியார் அண்ணா கலைஞர் இவர்களின் மறுஉருவமாக பார்க்கிறேன்.

dmk

சின்னவர் என்று அழையுங்கள்

என் மீது கொண்ட அன்பினால் கழக உடன்பிறப்புகள் என்னை ‘மூன்றாம் கலைஞர்’ இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களுக்கு எனது வேண்டுகோள், வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே கூறுகிறேன் மூன்றாவது கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் எனக்கு துளிகூட உடன்பாடு‌ இல்லை. சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் உள்ளதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

dmk stalin

தொண்டர்களுக்கு நிதி உதவி

திமுக தொண்டர்களுக்கு நிதி உதவி நிகழ்ச்சி நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடத்துவோம் அதற்கு நான் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் மாதம் மாதம் கூட நான் மகிழ்ச்சியுடன் வருகிறேன். திமுக இளைஞரணிக்கு நிதியாக 3 ஆண்டுகளில் 10 கோடி சேர்ந்துள்ளது. அதை வங்கியில் டெபாசிட் செய்துள்ளோம். அதில் வரும் வட்டியை திமுக தொண்டர்களின் மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைக்கு வழங்குவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

Related posts