அரசியல்தமிழ்நாடு

ஆளுநரை சந்திக்கும் மு.க. ஸ்டாலின் – நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து கலந்தாய்வு !

கிண்டியில் ராஜபவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் vs திமுக

இதனிடையே, ஆளுநர் ஆர்.என். ரவி, சமீபத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்து கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதுதவிர, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் உட்பட பல்வேறு விழாக்களில் தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர் பேசி வருகிறார். இதற்கு அதே மேடையிலும், வெளியிலும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்து வருகிறார். மேலும், தமிழ்ப் ­புத்­தாண்டை(பொங்கல்) ஒட்டி ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற தேநீர் விருந்தை தமி­ழக அரசு புறக்­க­ணித்­தது. முதல்வர், அமைச்­சர்­கள், அரசு அதி­கா­ரி­கள், திமுக கூட்­டணிக் கட்சியினர் உள்பட யாரும் இதில் கலந்து கொள்­ள­வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CM vs Governor

முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கிண்டியில் ராஜபவனில் உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்பொது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cm stalin

முக்கிய மசோதாக்கள்

குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்காக தமிழ்நாடு சித்தமருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவுக்கு 2022க்கு ஒப்புதல் அளித்திட வலியுறுத்தவுள்ளனர். மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு 1983, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமுன்வரைவு, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டமுன்வரைவு – 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு -2022 உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து , அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
CM meets Governor

Related posts