தமிழ்நாடு

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – வருமானவரித்துறை நடவடிக்கை !

சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வருமானவரித் துறை ரைடு

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உள்பட 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில், கணக்கில் காட்டப்படாத பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கினர்.

income tax

முறைகேடான சொத்துக்கள்

அதனை தொடர்ந்து 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களான சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானத்துறையினர் இரண்டாம் கட்டமாக முடக்கியிருந்தனர்.

மூன்றாவது கட்டமாக, சசிகலா மற்றும் அவரது தோழி இளவரசி, இளவரசி மகன் சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூரில் உள்ள நிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் சுமார் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன. இதில், சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய் மற்றும் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், இந்த சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர் நடவடிக்கை

இதற்கான நோட்டீஸ் சொத்துக்களின் வாயில்களில் ஒட்டப்பட்டு, சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக அப்போது சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூவருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இன்று சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற சசிகலாவின் பினாமி பெயரில் இருக்கும் நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு 15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Related posts