சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு – தமிழக அரசு அறிக்கை !

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறையில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியுள்ளது.

corona virus

தமிழக அரசு அறிக்கை

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 30,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,75,185 ஆக அதிகரித்துள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 11,094 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றின் பாதிப்பில் குணமடைந்து நேற்று 1,008 பேர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டில் 352 பேருக்கும், திருநெல்வேலியில் 120 பேருக்கும், கோயம்புத்தூரில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்’  என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

health minister

மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்

கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற உள்ளன. எனவே, கொரோனா பரவலை தடுப்பது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

central govt

Related posts