அரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !

தமிழ்நாட்டில் திமுக அரசு இருக்கும் வரை பாஜக வலுப்பெறாது என குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்து பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவை அறிவித்தனர். இவர்கள் இருவரும் இந்தியா முழுவதும்
கூட்டணி கட்சி சேர்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

yashwantsinha-droupadimurmu

திமுக கூட்டணி ஆதரவு

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை யஸ்வந்த் சின்ஹா சந்திதார். முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய அவர், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார். அவருக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.

yashwant sinha

செய்தியாளர் சந்திப்பு 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த யஸ்வந்த் சின்ஹா, ‘மத்திய அரசின் அத்துமீறலுக்கு கடந்த காலத்திலிருந்து இன்று வரை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றேன். இது வருங்காலங்களில் தொடரும். ஆளுநர்களின் நடவடிக்கை சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை. அரசியல் அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்பட்டு வருகின்றது.

திமுக வலுவாக உள்ளது

மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாஜக தான் முக்கிய காரணம். ஆனால் தமிழ்நாட்டில் திமுக வலுவாக ஆட்சி செய்து வருகின்றது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்’ என குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

anna arivalaiyam

Related posts