அரசியல்தமிழ்நாடு

ஓபிஸ்க்கு தலைமை பண்பு இல்லை ! சீரும் கே.சி. ஆணிமுத்து !

ஓபிஸ் கட்சி தலைமைக்கு சரியான நபர் இல்லை. எடப்பாடி தான் தலைமைக்கு சரியான நபர் என்று அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து.

யாருக்கு செல்வாக்கு அதிகம்

ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சியில் நாளுக்குநாள் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என அதிமுகவினர் அவரவர் சொந்த கருத்துக்களை கூறி வருகின்றனர். கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியும், தனக்குதான் அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் ஆதரவு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர்.

EPS vs OPS

திருவாடானை ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அதிமுக ஒன்றிய கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அகில உலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் கே.சி. ஆணிமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கே.சி. ஆணிமுத்து, ‘எடப்பாடி பழனிச்சாமி தான் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா கட்டி காத்த அதிமுகவின் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று பொதுக் குழுவில் உள்ள 98 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்த்துள்ளனர். திருவாடானை தொகுதியும் எடப்பாடி பக்கம் தான்’ என்றார்.

KC Aani Muthu

ஓபிஸ் மீது புகார்

ஓபிஎஸ் மீது எங்களுக்கு மிகுந்த வருத்தம் இருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் அவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தன் பக்கத்தில் வைத்துக் கொள்ளகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அது மாதிரியான சாதி ரீதியான போக்கு ஏதுமில்லை மாறாக கட்சியை சீரான பாதையில் கொண்டு செல்கிறார். இந்த வேறுபாடு தான் நாங்கள் ஓபிஎஸை வெறுக்க காரணம். அதை எல்லாம் விட, துரைமுருகனுக்கு ஓபிஎஸ் சால்வை போர்த்திக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இதை செய்திருப்பார் ஓபிஸ் ? இல்லை இப்படி செய்தால் ஜெயலலிதா தான் சும்மா இருந்திருப்பார் ?

OPS

மேலும், இரவு 3 மணிக்கு ஓபிஎஸ் நீதிபதியை சந்தித்து பேசியிருக்கிறார். டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இப்படி டெல்லி, நீதிமன்றம் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்திக்கிறார் ஓபிஸ். இப்படி கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் முறையில் நடந்துகொள்ளவதால் தான் நாங்கள் ஓபிஸை வெறுக்கிறோம்’ என

Related posts