குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பொலிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பொலிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், ‘வடகிழக்குப் பருவமழை வலுப்பெறுவதற்கான சூழல் நிலவி வருகின்றது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தால் அடுத்த வரும் நாட்களில் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் மழை
மேற்கு திசையில் காற்றின் மாறுபாடு காரணமாக ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை
நாளை சென்னை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிபேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை
மேலும், வரும் ஜூலை 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூலை 1 மற்றும் 2ம் தேதி தினங்கள் வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் கிழக்கு கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்றின் காரணமாக மீனவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.