சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

நீட் பயத்தால் மாணவன் வீடியோ வெளியீட்டு தற்கொலை – சென்னையில் சோகம் !

நீட் தேர்வின் தோல்வி பயத்தால் அரசு பள்ளி மாணவன் வீடியோ வெளியீட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவன்

சென்னை சூளைமேடு பகுதியில் சுப்பாராவ் நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. ஜெயந்தி அதே பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான தனுஷ் கடந்த 2020ம் ஆண்டு அரசு பள்ளியில் 12ம் வகுப்பில் 489 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நீட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

நீட் மாணவன்

தரவரிசை பட்டியலில் பழங்குடினர் வகுப்பை சேர்ந்த தனுஷ் 159 மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ கலந்தாய்விலும் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் எடுத்த மதிப்பெண்ணிற்கு அரசு மருத்துவ கல்லூரி கிடைக்கவில்லை. தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க பணம் இல்லாத காரணத்தினால் மீண்டு நீட் தேர்விற்காக பயிற்சியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற கனவோடு இரவு பகலாக படித்து வந்ததாக கூறப்படுகிறது.

neet exam

நீட் தேர்வு

இந்நிலையில், ஜூலை மாதம் 17ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, தனுஷ் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சகோதனிடம் ஆங்கிலத்தில் அனைத்தும் பாடங்கள் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

suicide

தற்கொலை

சம்பவம் குறித்து செய்தி அறிந்த சூளைமேடு போலீசார் தனுஷ் வீட்டுற்கு சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனுஷ் தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது மொபைலில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அரசு பள்ளியில் பயின்ற மாணவன் நீட் தேர்வின் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts