ஆன்மீகம்இந்தியாசமூகம்

திருப்பதி கோவில் கதவுகள் மூடப்படுகின்றது – திருமலை தேவஸ்தானம் !

அடுத்த மாதம் நிகழும் சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரிய கிரகணம்

அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும். மேலும், அதன்காரணமாக அன்றைய தினம் மட்டும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படுகிறது.

இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

Related posts