சமூகம்தமிழ்நாடு

இணையத்தில் சர்ச்சையான டாய்லெட் – மாநகராட்சி விளக்கம்!

கோவை மாநகராட்சி, புலியகுளம் பகுதி 66வது வார்டில் 2 பேர் ஒரே கழிப்பிடத்தை பயன்படுத்தும் வகையில் இரண்டு கோப்பைகள் பாதிக்கப்பட்டுள்ள கழிவறை ஒன்று அமைந்துள்ளது.

சர்ச்சை டாய்லெட்

அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 1995-ம் பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் கட்டப்பட்ட இந்த கழிப்பிடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது. மேலும், அந்த கழிவறையில் கதவுகளும் இல்லை. இதனால் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகத்தை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இதற்கு மாநகராட்சி சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

அதில், ‘அந்த கழிப்பிடம் குழந்தைகளுக்காக கட்டப்பட்டது. கதவுகள் இருந்தால் தாழ்ப்பாள் போட்டு வெளியே வரமுடியாமல் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் என்பதற்காக பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தைகள் கழிவறையை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும், தற்போது அது ஆண்களுக்கான கழிப்பறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது’ இவ்வாறு மாநகராட்சி கூறியுள்ளது.

 

Related posts