Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»கள்ள ஓட்டு போடுவதை கலையாகவே கொண்டவர்கள் நீங்கள் ; ஜெயக்குமாரை விளாசிய ஆர்.எஸ் பாரதி!

கள்ள ஓட்டு போடுவதை கலையாகவே கொண்டவர்கள் நீங்கள் ; ஜெயக்குமாரை விளாசிய ஆர்.எஸ் பாரதி!

March 14, 20222 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற அன்று சென்னையில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றார் என கூறி அவரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான ஜெயக்குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட  நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஜாமீன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

சிறையிலிருந்து வெளிவந்த ஜெயக்குமார், தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவை முடக்கவே திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் இவ்வாறெல்லாம் செயற்படுகிறார்கள். என் மீது வழக்குகளை தொடுக்கிறார்கள்  என பேசியிருந்த நிலையில், அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ் பாரதி விடுத்துள்ள அறிக்கையில் “சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அராஜகமாகச் செயல்பட்டு ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரி போல் நினைத்துக்கொண்டு திமுக தொண்டரை இழிவாக நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆணவச் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, ”அதிமுகவை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என அவர் வழக்கம்போல் அபாண்டமாகப் புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிக்க :  முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து – காது கொடுத்துக் கேட்கும் ஒரு முதல்வரை தமிழகம் பெற்றிருப்பதைத் ஜெயக்குமாரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. நில அபகரிப்பு, பொது வெளியில் அராஜகம், கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட புகார்களுக்குத் ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர- இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல.

சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது. ஜெயக்குமார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அதிமுகவை எச்சரிப்பதாக எப்படி அமையும்?

மொட்டைத் தலைக்கும்- முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்த வியூகத்தை ஏன் அவர் முன் எடுக்கிறார்? ஒருவேளை சூப்பர் ஸ்போக்ஸ்பர்சனாக இருந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவோ- இணை ஒருங்கிணைப்பாளராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்குமேயானால் அதை வைத்து அதிமுகவிற்குள் கச்சேரி நடத்திக் கொள்ளட்டும்.

தர்ம யுத்தம் நடத்தி விட்டு இணைந்தவர்- இணைத்தவர்களிடம் தர்மம் கேட்டுப் போராடட்டும். ஆனால் திமுகவின் மீதும்- கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மீதும் புழுதி வாரி வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க :  மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா - வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் !

கள்ள ஓட்டுப் போடுவதைக் கலையாக வைத்து- முதன் முதலில் சைதாப்பேட்டை, கும்மிடிப்பூண்டி கள்ள ஓட்டுப் பார்முலாவை தேர்தலில் புகுத்தி ஜனநாயக தேர்தலைச் சீர்குலைத்த அதிமுக ஆட்சியின் இருண்ட காலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் எத்தகையைக் கீழ்த்தரமான கள்ள ஓட்டுத் தந்திரத்தின் விளைவாக நடந்தது என்பதும் தமிழக மக்களுக்குத் தெரியும்.

ஆனால் நியாயமாக நேர்மையாகத் தேர்தல் நடைபெற்று இன்று உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவினரும் திமுகவின் கூட்டணிக் கட்சியினரும் அமர்ந்திருப்பதைச் சகித்துக் கொள்ள இயலாத ஜெயக்குமார் திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளைக் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் கழகத் தலைவர் காட்டிய பெருந்தன்மை.

ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு- மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபடும் போது- சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர- திமுகவோ, எங்கள் கழகத் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk dmk jayakumar rs bharathi
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமைதானத்திற்குள் நுழைந்த கோலி ரசிகர்கள் ; வழக்கு பதிவு செய்தது காவல்துறை!
Next Article சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ; உலகம் முழுவதும் பரவும் அபாயம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.