உலகம்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ; உலகம் முழுவதும் பரவும் அபாயம்!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டின் பல மாகாணங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே ரீதியில் பாதிப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கினால் உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை பரவலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.


கடந்த 2019 ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகும் முழுதும் பரவி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவுக்கு எதிராக போராடின. ஊரடங்கு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்  மக்களின் அன்றாட வாழ்க்கையே சிரமமானது. தொழில் முடக்கம், வேலை இழப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலை உருவானது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விரைவாக உலகம் முழுவதும் செலுத்தப்பட்டது. தடுப்பூசி உதவியால் கொரோன பாதிப்பு மெல்லமெல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். அரசின் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் முதல் அலை தொடங்கிய சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பது கண்டறியப்படவில்லை. ஆனால், சீனாவின் பல மாகாணங்கள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுனை முழு வீச்சில் அமல்படுத்தி இருக்கின்றன.

புதிய வகை கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்கும்பட்சத்தில் அது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்படுகிறது.புதிய வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிற மருத்துவ வல்லுநர்களின் நம்பிக்கை மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

Related posts