இந்தியா இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் பெங்களூரில் நடந்து வருகிறது. 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி பேட் செய்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வலு சேர்த்தனர்.
இந்திய அணியில் இடம்பிடிப்பதே கடினமாக இருக்கும் நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தொடர்ச்சியாக தவறவிட்டு வருகிறார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய மியங்க் இரண்டாவது போட்டியிலும் சோபிக்கவில்லை. சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மயங்க் அகர்வால் மீது மிகுந்த நம்பிக்கையோடு வாய்ப்பளித்த இத்திய அணியின் பயிச்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மயங்க் அகர்வால் மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், மயங்க் அகர்வால் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு, அதிர்ஷ்டவசமாகக் மும்பை டெஸ்டில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா தொடரில் சிறப்பாக ஆடினார். ஆனால் தற்போது தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்.
துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் அணியில் இடம்பிடிக்கவில்லை. அடுத்த போட்டியில் வந்துவிடலாம். அதற்குள் நீங்கள் வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் தேவையில்லாத ஷாட்டுகளை விளையாடி சொதப்பி வருகிறீர்கள், கவனமாக இருங்கள் என மயங்க் அகர்வாலை ஆகாஷ் சோப்ரா அறிவுத்தியுள்ளார்.