தமிழ் சினிமாவும் தொடரும் விவாகரத்தும்
சில காலங்களாக தமிழ் திரையுலகின் பிரபல தம்பதியர்களின் விவாகரத்துகள் என்பது எளிதாக நடந்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா, நாக சைதன்ய – சமந்தா விவகாரத்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வரிசையில் சமீபத்தில் டைரக்டர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலருக்கும் சட்டப்படி கோர்ட் மூலம் விவாகரத்து நடந்தது.
பாலாவுக்கும், அவரது மனைவி முத்துமலருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான்கு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. பாலா பட வேலையில் கவனமாக இருந்தபோது, முத்துமலர் அடிக்கடி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பாடகி சைந்தவி மற்றும் அவரது தொழில்துறையைச் சேர்ந்த தோழிகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பிறகு நடந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் மருத்துவர் மகேந்திரனின் மகன் கீர்த்தனுக்கும் நடந்த திருமணத்தில் பாலாவும் மலர்கொடியும் தனித்தனியாக கலந்துக்கொண்டனர். பாலாவை பார்த்ததும் அவரது மகள் செய்த செயல்கள் வீடியோ மூலம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
திருமணநிகழ்வில் அப்பாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்த மகள் பிரார்த்தனா, ஓடி வந்து அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டார். நீண்ட நேரம் பாலாவின் மடியில் அமர்ந்திருந்த பிரார்த்தனா, அதன் பிறகு பின் வரிசையில் அமர்ந்தபடி தனது அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். பிரார்த்தனா பாலாவுடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்வு இப்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விவாகரத்து பெற்ற பிறகு பாலாவுக்கும் மகளுக்கு நடந்த முதல் சந்திப்பு இதுதான் என கூறப்படுகிறது.