Editor's Picksஅரசியல்இந்தியாசினிமா

இந்தியை திணிக்கும் அமித்ஷா.. A.R. ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கை புகைப்படம்!

இசைப்புயல் A .R. ரஹ்மான் ‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

இசைப்புயல் A .R. ரஹ்மான் இசை மீது மட்டும் இல்லாமல் தமிழ் மீதும் அலாதியான காதல் கொண்டவர். தமிழ், தமிழர்களின் பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சினிமா பாடல்கள் மற்றும் தனி பாடல்களை இயற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் A .R. ரஹ்மான் மூப்பில்லா தமிழ் என்ற தனி பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடல் தமிழர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை இந்தியர்கள் இணைப்பு மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார். அமித்ஷாவின் கருத்துக்கு பெரியளவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் “ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது” என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ARR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arrahman)

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என பல அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அமித்ஷா அவர்களின் கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வரும் நிலையில் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளோடு தமிழணங்கு படத்தை பதிவிட்டு இருக்கிறார் A .R. ரஹ்மான். அவரின் இந்த பதிவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். காலையில் இருந்து ட்விட்டரில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஸ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts