Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»வட மாநிலத்தவருக்கு உள்நுழைவு சீட்டு தேவை.. ஓப்பனாக பேசும் வேல்முருகனின் அறிக்கை!

வட மாநிலத்தவருக்கு உள்நுழைவு சீட்டு தேவை.. ஓப்பனாக பேசும் வேல்முருகனின் அறிக்கை!

April 9, 20223 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் தமிழ் மக்களை விட வட மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகமாக வசிக்கிறார்கள் என்று கூறும் அளவுக்கு சூழல் மாறிவிட்டது. சில காலங்களில் தமிழக அரசியலையே அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்ற கருத்தை பல தலைவர்கள் காட்டமாக கூறி வருகின்றனர்.

வட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களில் தொடக்கி பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை ஆக்கிரமிப்பு செய்ய தொடக்கிவிட்டனர். சென்னையில் பெரும்பாலான கடைகள், சூப்பர் மார்கெட்டுகள், தங்கும் விடுதிகள், நிறுவனங்கள் என அனைத்திற்கும் அவர்கள் முதலாளிகளாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இந்திய அரசும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே செயல்படுகிறது. ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு போன்ற திட்டங்கள் அவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டது போல தோன்றுகிறது. இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் அது தமிழ்நாட்டின் கலாசாரத்தை, பண்பாட்டை, வரலாற்றை, பழக்கவழக்கங்களை முற்றிலும் அழித்துவிட வாய்ப்புள்ளது. தமிழ் நாடு என்ற பெயரே நாளை மாற்றப்படும் சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வேல்முருகன் அறிக்கை

இந்நிலையில், இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்திற்குள் வரும் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறை படுத்த வேண்டும்.

சென்னையைச் சுற்றியமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடமாநில மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏ.டி.எம். மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழ்நாடு வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்குச் சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட மாநிலத்தவர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல் வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  12-ம் வகுப்புத் தேர்வு: மாணவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

அக்குற்றங்களின் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால், காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. குற்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு காவல் துறையினர், இவர்களை முறையாகக் கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதனையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக, மண்ணின் மக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள், தற்போது காவல்துறையினர் மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

பாஜக தான் காரணம்

தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற இந்திய ஒன்றிய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழ்நாட்டு மண்ணில் ஆதிக்கம் செய்யும், பாஜக.வின் பின் புலத்துடன் வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் மூலமாக, குஜராத், உத்தரப்பிரதேசத்தை போன்று மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன் வாயிலாக, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின் மக்களை சிறுபான்மையாக்கலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க :  ​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது

ஒன்றிய பாஜக அரசு கொடுத்த தைரியத்தின் காரணமாக தான், கோவை, திருப்பூரில் இந்தியில் பிரச்சாரம், திருப்பூரில் கலவரம் ஆகிய குற்ற நிகழ்வுகள் அரங்கேறியது. அதன் மற்றொரு சிக்கல் தான், காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலும். எனவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் உள்நுழைவு அனுமதிச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதற்காக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில் தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். கடந்த 2000ஆம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் 2011ஆம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 இலட்சத்து 96,906 வெளி நாட் டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது அமெரிக்கா. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலைக்கு ஒட்டிய வயிரோடு வருகிறான், குறைந்த கூலிக்கு வருகிறான் என்று சிலர் வக்காலத்து வாக்குவதை பொருட்படுத்தாமல், தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று ஆகியவை வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறிஇருந்தார்.

 

north indian theif cases north indians velmurugan velmurugan arikai
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகடைசி இரண்டு பந்துகள்; இரண்டு சிக்ஸர்கள்.. குஜராத் அணியின் த்ரில் வெற்றி!
Next Article இந்தியை திணிக்கும் அமித்ஷா.. A.R. ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கை புகைப்படம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.