12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-
இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.
உங்கள் பள்ளிப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணம், உங்கள் உழைப்பும் முயற்சியும் வெளிப்படும் நேரமாகும். தன்னம்பிக்கையுடன், மனஅமைதியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.
உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்து, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று, உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகவும், வெற்றிகளால் நிரம்பியதாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்.

