விளையாட்டு

கடைசி இரண்டு பந்துகள்; இரண்டு சிக்ஸர்கள்.. குஜராத் அணியின் த்ரில் வெற்றி!

ஹாட்ரிக் வெற்றியை ருசித்த குஜராத் – கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்கார்களாக கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் தவான் களம் இறங்கினர். துவக்கத்திலையே பங்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியாவின் ஷாட் பாலுக்கு தன் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த பேஸ்ட்ரோவும் 8 ரன்னிற்கு நடையைக்கட்டினார். பின்பு இணைந்த தவான், லிவிங்ஸ்டன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் சரசரவென உயர்ந்தது.

அறிமுக வீரரான நால்கண்டேவின் பந்துவீச்சை நான்கு திசைகளிலும் லிவிங்ஸ்டன் பறக்க விட்டார். ரஷித் கான் வீசிய 11 வது ஓவரின் முதல் பந்திலையே தவான் 35 ரன்னில் கீப்பரிடம் கேட்ச் ஆனார். பின்பு களம் இறங்கிய இளம் வீரரான ஜெட்டிஸ் 11 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்து ஒரளவு நம்பிக்கை தந்தார். நிலைத்து பொறுப்புடன் விளையாடிய லிவிங்ஸ்டன் 64 ரன்கள் எடுத்து ரஷித் கானின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சாளர்களான ராகுல் சர்மா மற்றும் அர்ஷுப் சிங் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் என மாறி மாறி வெளுத்துக்கட்ட அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 189 தாக உயர்ந்தது. அதிகப்பச்சமாக குஜராத் அணியின் ரஷித் கான் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

குஜராத்தின் அதிரடியான துவக்கம்

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் களம் இறங்கிய துவக்க ஆட்டக்காரரான கில், பவர் ப்ளேவில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளராகளை க்கில் பண்ணிவிடார் என்றே சொல்ல வேண்டும். குஜராத் அணியானது பவர் ப்ளே முடிவில் 53 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது.

அறிமுக வீரரான சாய் சுதர்சன் ராகுல் சர்மா வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டார். இளம் ஜோடியான கில் மற்றும் சாய் சுதர்சன் தகுந்த நேரத்தில் பவுண்டரி சிக்சர் என அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் சர்மாவின் வலையில் சிக்கினார். 96 ரன்கள் எடுத்திருந்த கில் ஸ்மித்திடம் தன் விக்கெட்டை பறிகொடுத்து ஐபிஎலில் தன் முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

குஜராத்தானது சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்து தத்தளித்து. இறுதியில் குஜராத் 2 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு சென்றது. களத்தில் தைரியத்தோடு நின்ற திவாட்டியா 2 பந்துகளுக்கு 2 சிக்சர் அடித்து அணியை த்ரில் வெற்றி அடையச் செய்தார்.

பஞ்சாப் அணியில் அதிகபச்சமாக ரபாடா 2 விக்கெட்டை வீழ்த்தினார். இப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரர்க்கான விருதை 96 ரன்கள் விளாசிய கில் தட்டிச்சென்றார்.

Related posts