விளையாட்டு

குஜராத்திடம் வீழ்ந்தது ராஜஸ்தான்…! ஆரஞ்ச் தொப்பியை வசப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22 வது ஆட்டம் நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்

குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மேத்தியூ வேட் மற்றும் கில் களம் இறங்கினர். குஜராத் அணி தொடக்கத்துலையே ஆட்டம் கண்டது. அடுத்தடுத்த ஓவரில் மேத்தியூ வேட் 12 ரன்னிலும் , அடுத்து வந்த விஜய் சங்கர் 2 ரன்னிலும், துவக்க ஆட்டக்காரரான கில் 13 ரன்னிலும் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் மனோகர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடி காட்டிய பாண்டியா அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்த்து விளையாடிய மனோகர் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரின் இடத்தை நிரப்பும் பொருட்டு களம் இறங்கிய மில்லர், அதிரடியாக ஆடி 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டனாக பொறுப்புடன் விளையாடிய பாண்டியா 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணியில் சஹால், பராக் ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணி

193 ரன்களை இலக்காக துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் மற்றும் பட்லர் களம் இறங்கினர். தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் பூஜ்ஜிய ரன்னில் நடையை கட்டி அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த அஸ்வின் 8 ரன்னில் வெளியேறினார். இதற்கிடையில், தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசினார்.

அவர் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை சிதறவிட்டு 52 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கேப்டன் சஞ்சு சாம்சன் கேப்டன் பாண்டியாவிடம் ரன்அவுட் ஆகினார். பின்னர் அதிரடியாக ரன்களை குவித்து வந்த ஷிம்ரோன் ஹெட்மியர் 28 ரன்களிலும், ரியான் பராக் 18 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அதிக ரன்கள் எடுத்தோர்க்காண “ஆரஞ்சு தொப்பியை” ஹர்திக் பாண்டிய வசப்படுத்தினார்.

Related posts