உலக நாடுகளுக்கு மற்றுமோர் தலைவலி – வந்து விட்டதா ஜாம்பி நோய்?
வனம் மற்றும் பூங்காவில் உற்சாகமாக துள்ளிக்குதித்து இயற்கையோடு விளையாடும் மான்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்பேற்பட்ட அழகான மான்களும் மனிதர்களுக்கு எதிராக திரும்பினால் என்ன செய்வது? சிட்டாய் பறந்து பழக்கப்பட்ட மான்கள் தற்போது சோர்வாக சுற்றித் திரிவது மனித குலத்திற்கு விடப்பட்டிருக்கும் மாபெரும் எச்சரிக்கை.
தற்போது, கனடாவில் மான்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் புது வகையான ‘ஜாம்பி’ என்னும் தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது. இன்று வரைக்கும் கொரானோ என்னும் பெருந்தொற்று நம்பை வாட்டி வதைக்கும் சூழலில் புதிய வகையான ‘ஜாம்பி’ நோய் பரவுவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஜாம்பி என்னும் திரைப்படத்தின் மூலம் இந்த பெயரை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.
ஆனால், இந்த ஜாம்பி தொற்று 1960 -லையே அமெரிக்காவை உலுக்கியது. அதன் பிறகு 1990 -இல் கனடாவிற்குள் இந்நோய் நுழைந்தது. தற்போது மீண்டும் கனடாவில் தலை தூக்கி உள்ளது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட மான்களுக்கு மூளை பாதிப்பு, உமிழ் நீர் மற்றும் சிறுநீர் அதிகப்படியாக வெளியேறுதல், எடை குறைவு போன்றவை ஏற்படும். இதுவரை இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது இல்லை. ஆனால், மனிதர்களுக்கு பரவும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
ஜாம்பி நோய் மான் இறைச்சி உண்பவர்கள், மான்களை வேட்டையாடுபவர்கள் மற்றும் சோர்வாக இருக்கும் மானை தடவிக்கொடுத்து கொஞ்சுபவர்களுக்கு வினையாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது போன்று மான்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும் இந்நோய்க்கு தடுப்பூசியோ மருந்துகளோ கண்டுபிடிக்காதது வருந்தத்தக்க ஒன்றாக உள்ளது.