சினிமாதமிழ்நாடு

தமிழ் நடிகரை புகழ்ந்து தள்ளிய கே.ஜி.எஃப் ஹீரோ.. அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் Beast மற்றும் KGF 2!

தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வளம்வரும் சரண் சக்தி, தற்போது யாஷின் கே.ஜி.எஃப் 2-ல் இளம் ராக்கி பாய்யாக நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வட சென்னை. இப்படத்தில் கதாநாயகியின் தம்பியாக நடித்தவர் சரண் சக்தி. இவர் சாகா எனும் படத்தில் கதாநாயகராக அறிமுகம் ஆனவர்.

கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1 என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழிப் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்த அதிரடித் திரைப்படமாகும். இது பிரசாந்த் நீல் எழுதி இயக்கியது. மேலும், இது ஹோம்பலே பிலிம்ஸ் பேனரின் கீழ் விஜய் கிரகந்தூரால் தயாரிக்கப்பட்டது. கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1-ன் வரவேற்பைத் தொடர்ந்து K.G.F: அத்தியாயம் 2 ஏப்ரல் 14, விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் வெளியாகிறது. K.G.F:2 படக்குழு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர். அதில் நடிகர் யாஷ் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்தார். அப்போது தமிழ் நடிகர் சரண் பற்றி கேட்கும் போது, சரண் சக்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும், படப்பிடிப்பின் போது அவர் நடிப்பைக் கண்டு வியந்துப் போனதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்தப்படியாக பத்திரிகையாளர் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் படத்தின் கதாநாயகியிடம் ஜாதி ரீதியான கேள்விகளை முன்வைத்தார். இதனால் அங்கு சற்று சலசலப்பு நிலவியது.

உங்கள் பார்வையில் பயில்வான் ரங்கநாதன் கேள்வி சரியானதா?

 

Related posts