சமூகம்தமிழ்நாடு

கல்லூரி மாணவி கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவு 

இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், நள்ளிரவில் தனிப்படை போலீசார் கொலையாளி சதீஷ் என்பவரை துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் கைது செய்தனர். பின்பு அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இன்று குற்றவாளியை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீசை வரும் 28ம் தேதி வரை அதாவது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts