தமிழ்நாடுவணிகம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு!

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த 8-ம் தேதி ரூ.38,720 ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.520 ஆக குறைந்தது. இதனிடையே நேற்று ரூ.37,880 ஆக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.45 ஆக குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts