கொலை வழக்கு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளி சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் கைது செய்தனர். பின்பு அவரிடம் விடிய விடிய நடத்திய விசாரணையில் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். மேலும், இன்று கொலையாளி சதீசை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴 pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022

