சினிமாவெள்ளித்திரை

வெளியானது ஆர்.ஜே.பாலாஜி பட போஸ்டர்!

ஃபர்ஸ்ட் லுக்

வடகறி, நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. பின்னர் 2019ம் ஆண்டு வெளியான ‘எல்கேஜி’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களிலும் நடித்தார். இந்நிலையில், ‘இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா’, ‘ஜூங்கா’ படங்களை இயக்கிய கோகுல் இயக்கும் புதிய படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். ‘சிங்கப்பூர் சலூன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Related posts