சுற்றுசூழல்தமிழ்நாடு

கனமழை எதிரொலி திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை

வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

Related posts