சென்னையின் முக்கிய மாநகர பேருந்து நிலையங்களில் ஒன்றான பாரிமுனை பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் வசதிகளும் உள்ளது.
பேருந்து நிலையம்
பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் 695 மாநகர பேருந்துகள் 70 வழித்தடங்களில் பயணித்து வருகிறது. இங்கு இருந்து சென்னை மாநகரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரிமுனையில் பேருந்து நிறுத்தும் இடங்கள், வர்த்தகப் பகுதி, தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி உள்ளிட்டவை கூடிய புதிய மல்டி மாடல் பேருந்து நிலையம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 4.42 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி 21 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது.

