6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்துவந்தது. திமுக அரசு பதவியேற்றதும் அதிமுக ஆட்சியில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் திமுக 21 மாநகராட்சி மேயர் பதவிகளிலும் வெற்றிப்பெற்றது. சென்னை மாநகராட்சி, பட்டியல் இன பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சியின் 3 வது பெண் மேயராகவும், பட்டியல் இனத்தை சேர்ந்த முதல் பெண் மேயராகவும் பிரியா ராஜன் பதவியேற்றார்.
6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசிக்க சென்னை மாநகராட்சில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. சென்னை மேம்பாடு தொடர்பாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு, 70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க 1.86 கோடி நிதி, கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தியது என பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கிறது.கல்வி, சுகாதாரம், மழைநீர் வடிகால் போன்றவற்றுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. சொத்துவரி உயர்வு காரணமாக பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.