மின் கட்டண உயர்வை எதிர்த்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர் ஆகிய உணவு பொருட்கள் மீது மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. அதேபோல் கடந்த திங்கட்கிழமை தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இதனை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரும் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பெயரில் மதுரையில் நடைபெறவிருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தங்குகிறார். மேலும் இந்த மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

