திருமுல்லைவாயல் அருகே 3வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவி தற்கொலை
திருமுல்லைவாயல் அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா. பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவருக்கு 19 வயதான லஷ்ணா ஸ்வேதா உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு 12ம் வகுப்பை முடித்த லஷ்ணா ஸ்வேதா 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வருகிறார். தொடர்ந்து இரண்டு முறையும் தேர்ச்சி பெற முடியாத நிலையில், 3-வது முறையாக இந்த ஆண்டும் தேர்வு எழுதியுள்ளார். இதனிடையே நேற்று வெளியான நீட் தேர்வு முடிவிலும் லஷ்ணா ஸ்வேதா தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நள்ளிரவு ஒரு மணியளவில் எழுந்த மாணவி திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

