தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரோனா விதிமுறைகளை கட்டிப்பிடிக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவல்
இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனா பாதிப்பில் இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக கேரளா, மிசோரம், மகாராஷ்டிரா, மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மத்திய சுகாதாரத்துறை கடிதம்
கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற உள்ளன. எனவே, கொரோனா பரவலை தடுப்பது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் நாள் ஓன்றுக்கு 25,000 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் 1,650 மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டை மீறும் பொதுமக்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறித்தியுள்ளார்கள்.