கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 1/4 கிலோ எடை கொண்டது. செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.
கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது உடலின் பல முக்கிய செயல்பாடுகளை பாதிக்கிறது. கல்லீரலின் சக்தியானது கண்களில் முடிவடைகிறது.
அதனால்தான் கல்லீரல் பாதிப்பான மஞ்சள் காமாலையை கண்ணைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. பித்தநீர்ச் சுரப்பைத் தூண்டும் கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறை மாற்றங்களும் கல்லீரலில் பாதகமான விளைவை ஏற்படுத்த கூடும்.
கல்லீரலை பலப்படுத்த சில இயர்கையான வழிமுறைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பச்சை கீரைகள் :
பச்சைக் கீரைகளை வாரம் 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். அதில் உள்ள குளோரோஃபில் நச்சுக்களை வெளியேற்றும். நச்சு வாய்ந்த ரசாயனங்களை வீரியமிழக்கச் செய்யும்.
பூண்டு :
பூண்டிலுள்ள அலிசின் கல்லீரலில் ஏபடும் சேதாரங்களை குணப்படுத்துகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டில் செலினியம் என்ற கனிமம் காணப்படுகிறது. இது கல்லீரலை சுத்தப்படுத்தவும் கல்லீரல் நொதிகள் மற்றும் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

கல்லீரலுக்கு ஆற்றலைத் தரும் இயற்கையான மூலிகைகள் பரவலாகக் கிடைக்கின்றன. பொதுவாக கல்லீரலை பாதிக்கும் மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி செடி மிகவும் நன்மையைத் தரும். அதேபோல அதிமதுரமம் கல்லீரலை பலப்படுத்த உதவும்.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு சிட்ரிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை காணப்படுகின்றன. ஆற்றலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தை குறைக்கும் பண்புகள் இவற்றில் காணப்படுகின்றன.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட சிட்ரஸ் பழங்கள் கல்லீரல் நச்சுத்தன்மையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்து கால்சியம் இரும்பு சத்து உள்ளது.தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது.
பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து சாப்பிடலாம். அல்லது சூப் செய்து குடிக்கலாம். இதனால் கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
தேனுடன் பால் அல்லது எலுமிச்சை ஜுஸ் கலந்து குடித்தால் கல்லீரல் வலிமையாக இருக்கும். எனவே, கல்லீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேன் சாப்பிடுவது நல்லது.
நெல்லிக்காய் :
வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்றாக செயல்படும். தயிர், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும்.

கல்லீரலை வலுப்படுத்துவதில் பாகற்காய் பெரும் பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சார்ந்த பல நோய்களுக்கு பாகற்காய் ஒரு மருத்துவ உணவாகவே பயன்படுகிறது.

