சினிமாமருத்துவம்

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

பிரபல நடிகை

கடந்த 2007ம் ஆண்டு வெளியான ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். அதனைத்தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூனம் கவுர் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மன நிலை பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பூனம் கவுர் தற்போது கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts