சமூகம்தமிழ்நாடு

கல்லூரி மாணவி கொலை வழக்கு – சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கு

இந்த வழக்கில் கொலையாளியை தனிப்படை அமைத்து போலீசார் தேடினர். இந்நிலையில், நள்ளிரவில் தனிப்படை போலீசார் கொலையாளி சதீஷ் என்பவரை துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் கைது செய்தனர். பின்பு அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இன்று குற்றவாளியை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிபிசிஐடி

சதீசை வரும் 28ம் தேதி வரை அதாவது 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

Related posts