தமிழ்நாடுமருத்துவம்

2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,430 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று முன்தினம் 2,786 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 2,678 பேராக குறைந்தது. இன்று கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 26 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 935 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts