ட்ரைலர்
அண்ணாமலை, பாட்ஷா படங்களை தொடர்ந்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுத, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும், இதில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடிக்க, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனிடையே இப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்கில் வெளியாகும் அறிவிக்கப்பட்டது. இதன் புதிய காட்சிகளின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், புதுப்பொலிவுடன் உருவாகியுள்ள ‘பாபா’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready to experience the magic of Remastered #BABA ✨
Trailer Out today at 6 pm! 🎬BABA Counting Starts…
4 more hours to go!#BABAComingSoon #BABARerelease#BABATrailer🤘🏼#Superstar @rajinikanth @Suresh_Krissna@mkoirala @arrahman @ash_rajinikanth @brindagopal pic.twitter.com/bcqZ1Fiukz— Ramesh Bala (@rameshlaus) December 3, 2022

