சினிமாவெள்ளித்திரை

கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி படக்குழு!

விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’ இப்படத்தில் நடிகை அனு கீர்த்திவாஸ் கதாநாயகியாக நடிக்க, பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேயாத மான், பபூன், 777 சார்லி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘டிஎஸ்பி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts