சமூகம் - வாழ்க்கைசினிமா

ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல்!

சூரி இரங்கல்

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெறும் பரோட்டா காமெடியில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காலமானார். இதற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related posts