கல்விசமூகம்தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் ஆசிரியர்களின் கைது ஏன் ? – நீதிபதி கேள்வி !

கள்ளக்குறிச்சி தனியார் முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதி கேள்வி

சின்னசேலம், கணியமூரில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள்ளது. கைது நடவடிக்கைக்கான காரணத்தை சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதுக்கான காரணத்தை தெரிவிக்காவிடில் விசாரணை அதிகாரிகள் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கருத்து தெரிவித்துள்ளார். ஜாமீன் கோரி பள்ளி நிர்வாகிகள் 5 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts