கொங்கு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்துள்ளார்.
அண்ணாமலை கேள்வி
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். மேலும், திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை அலுவலரின் பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது விபத்துகள் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா?
மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? (2/2)
— K.Annamalai (@annamalai_k) August 24, 2022

