உலகம்சினிமாவெள்ளித்திரை

4K தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகிறது பிரபல ஹாலிவுட் திரைப்படம் !

அவதார் படம்

டைட்டானிக், டெர்மினேட்டர் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை செய்தது மட்டுமின்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ளது. மேலும், அவதார்-2 உலகம் முழுவதும் டிசம்பர் 16-ம் தேதி 160 மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4கே தொழில்நுட்பம்

இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை 4கே தொழில்நுட்பத்துடன் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பெயரில், செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மீண்டும் அவதார் திரைப்படம் 4கே, 3டி, எச்.டி.ஆர் தரத்தில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts