விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
இன்று தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். விஜயகாந்த் நன்றாக உள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்திக்க ஆசைப்பட்டார். அதற்காக தான் சுதந்திர தினத்தன்று அழைத்து வந்தோம். நாளை தலைமைக் கழகத்திற்கு வருகை தரும் தலைவரை தொண்டர்கள் நேரில் சந்திக்கலாம். நமது முரசு நாளை தமிழக அரசாக மாறும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். விஜயகாந்த் நலமாக இருக்கிறார். உடல் நிலை பிரச்சனையால் சோர்வு தானே தவிர அவர் எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்’ என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

