சினிமாவெள்ளித்திரை

சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் !

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவா – சூர்யா கூட்டணி

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Related posts