சமூகம்சினிமா

வெற்றிமாறன் படப்பிடிப்பில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

உயிரிழப்பு

அசுரன் படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related posts