வைரல் புகைப்படங்கள்
வருண் தேஜா நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. பிரபல நடிகையான இவர் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குங்பூ யோகா, ராதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தற்போது அவர் ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில், நடிகை திஷா பதானி நீச்சல் குளத்தில் இருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

