மத்திய அரசு நாடு முழுவதும் தடை சட்டம் கொண்டு வந்தால் தான் ஆன்லைன் ரம்மியை முழுமையாக ஒழிக்க முடியும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்த அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் 2022-23 ஆண்டிற்கான விண்ணப்ப பதிவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தடை சட்டம்
அந்த பரிந்துரைகளின் கீழ் ஆராய்ந்து பார்க்கும் போது இது தமிழக அரசு மட்டும் செய்ய முடியாது என்பது தெரிகிறது. ஆன்லைன் ரம்மியை தமிழகத்தில் தடை செய்தாலும், அண்டை மாநிலங்களில் இருந்து கூட விளையாடும் அபாயம் உள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் சட்டம் கொண்டுவந்தால் தான் ஆன்லைன் ரம்மியை முழுமையாக ஒழிக்க முடியும்’ என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

